ரோடு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
கம்பம்: கம்பத்தில் ரோடு அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். கம்பம் நகரில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு தெருக்கள் சீரமைப்பு, தார் ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று மதியம் கொண்டித்தொழு தெரு, மெயின்பஜார் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில மின் உற்பத்தி நிறுவன மேலாண்மை இயக்குநருமான கோவிந்த ராவ் ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் ரஞ்ஜீத் சிங், ஆர்.டி.ஒ. செய்யது முகமது இருந்தனர். போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக உள்ளது. இரவில் பணிகள் மேற்கொள்ள வேண்டியது தானே என்று அதிகாரிகளிடம் கேட்டார். பின்னர் பணிகளை விரைவாக நிறைவு செய்ய கூறினார். சிலப்பதிகார வீதியில் நகராட்சி அலுவலர்கள் சிறப்பு முகாமிற்காக விண்ணப்பங்கள் வழங்கி கொண்டிருந்தனர். பெண்களிடம் மகளிர் உரிமை தொகை கிடைத்ததா, யார் யாருக்கு கிடைக்கவில்லை, தற்போது நடைபெறும் முகாமிற்கு விண்ணப்பங்கள் வழங்கி விளக்கி கூறினார்களா என்று கேட்டார். பொதுமக்கள் மகளிர் உரிமை தொகைக்கு முகாமில் நேரடியாக விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றனர்.