உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தேனியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்கவும், பதவி விலக வேண்டும்.'என, பழைய பஸ் ஸ்டாண்ட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தேனி நகரச் செயலாளர் நாராயணபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் திருக்கண்ணன், தேனி நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், தி.மு.க., தெற்கு ஒன்றியச் செயலாளர் ரத்தினசபாபதி முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., சரவணக்குமார்,போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன்,பெரியகுளம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் முகமது இலியாஸ், போடி நகர செயலாளர் புருஷோத்தமன்உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.பெரியகுளம்: அம்பேத்கர் சிலை முன்பு தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக அவரது சிலைக்கு சரவணக்குமார் எம்.எல்.ஏ., தண்ணீர் ஊற்றி தூய்மை செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் முகமது இலியாஸ், நகராட்சி தலைவர் சுமிதா, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, நகர பொருளாளர் சுந்தரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை