மருத்துவமனைகள் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம்
தேனி: ஒலி எழுப்பும் பட்டாசுகளை காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டும் வெடிக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்த நேரங்களில் மருத்துவமனைகள், குடிசை பகுதிகள், வழிபாட்டு தலங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து தீபாவளி கொண்டாடுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.