உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிசப்தமான சூழலில் பிரசவிக்கும் வரையாடுகள்

நிசப்தமான சூழலில் பிரசவிக்கும் வரையாடுகள்

மூணாறு,: மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் நிலவும் நிசப்தமான சூழலில் வரையாடுகள் குட்டிகளை ஈன்றெடுத்து வருகின்றன.அங்கு அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை கடும் கட்டுப்பாடுகளுடன் வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை துவங்கியதும் ஜூன், ஜூலை மாதங்களில் மேக மூட்டத்துடன் பெய்யும் சாரல் மழையின்போது வரையாடுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். அவற்றின் பிரவச காலம் பிப்ரவரியில் துவங்கி மார்ச் இறுதி வரை நீடிக்கும். அப்போது இரவிகுளம் தேசிய பூங்கா மூடப்பட்டு ராஜமலைக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்படும்.அதன்படி பிப். ஒன்றில் பூங்கா மூடப்பட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நிசப்தமான சூழலில் வரையாடுகள் குட்டிகளை ஈன்றெடுத்து வருகின்றன.கடந்தாண்டு இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக பிறந்த 128 குட்டிகள் உள்பட 803 வரையாடுகள் உள்ளதாக வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை