உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி

வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி

உத்தமபாளையம்: உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி நிலை உள்ளது. புதிய அலுவலகம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் பயன்படுத்த முடியாத அவல நிலை தொடர்கிறதுஉத்தமபாளையத்தில் 23 ஆண்டுகளுக்கு முன் பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகம் துவக்கப்பட்டது. உத்தமபாளையம் ஆர். டி.ஒ. அலுவலக தரைத் தளத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஒட்டுநர் தேர்வு தளம் 0.5 ஏக்கரில் இருக்க வேண்டும். லைசென்ஸ் பெறுவோர் தேர்வு தளத்தில் வாகனங்களை ஒட்டி காட்ட வேண்டும்.இங்கு தேர்வு தளம் இல்லாததால் தனியார் நிலத்தில் ஒட்டுநர் தேர்வு தளம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் 50 க்கும் குறையாமல் லைசென்ஸ் பெற வாகனத்தை ஓட்டி காட்ட வருகின்றனர். இந்த டெஸ்ட் டிராக் மண் தரையாக இருப்பதால், மழை பெய்தால் வாகனங்களை ஓட்டி காட்டுவது சிரமம்.

தாசில்தார் சுணக்கம்

வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தேர்வு தளம் அமைக்க கோம்பை ரோட்டில் சிக்கச்சியம்மன் கோயில் அருகில் இடம் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பஞ்சமி நிலம் என்ற பிரச்னை கிளம்பியது. ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் டி.ஆர்.ஒ. இடத்தை ஒதுக்கீடு செய்தும், கையகப்படுத்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இடத்தை முறைப்படி எடுக்க முடியாமல் வட்டார போக்குவரத்து துறை திணறி வருகிறது. நிலம் கையகப்படுத்தி தர வேண்டிய தாசில்தார் சுணக்கம் காட்டி வருகிறார். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகம், தேர்வு தளம் அமைக்க முடியாமல் இழுபறியில் உள்ளது. இதற்கென ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்த நிதி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கலெக்டர் ஷஜீவனா தலையிட்டு, ஒதுக்கீடு செய்த நிலத்தை கையகப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை