உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்

 பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த மழையில் பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது. நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தலைமை ஆசிரியர் நாகராஜன், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி செயலாளர் பிச்சைமணி, ஆண்டிபட்டி பேரூராட்சி பணியாளர்கள் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டனர். மாணவர்கள் பள்ளியில் வழங்கப்பட்ட தங்களுக்கான காலை உணவை அருகில் இருந்த அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சாப்பிட்டனர். மழைநீர் அப்புறப்படுத்தப்பட்ட பின் வகுப்புகள் தாமதமாக துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி