உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பள்ளி ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது

அரசு பள்ளி ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது

--தேவதானப்பட்டி: தமிழக அரசின் 'கனவு ஆசிரியர்' விருது பெற்ற, கெங்குவார்பட்டி அரசு பள்ளி கணினி ஆசிரியர் ஆதீஸ்வரனை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வாழ்த்தினர்.பள்ளி கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு திட்டம் மூலமாக தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை கண்டறியப்படுகின்றனர். அவர்களின் புலம் சார்ந்த அறிவு, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ஆராய்ந்து, திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் 'கனவு ஆசிரியர்' விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர்களாக தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன. திருசெங்கோட்டில் நடந்த விழாவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் விருதுகளை பெற்றனர். கனவு ஆசிரியர் விருது பெற்ற கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் கணினி ஆசிரியர் ஆதீஸ்வரனை பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்