பள்ளியில் காய்ந்த மரங்களால் அபாயம்
கூடலுார்: லோயர்கேம்ப் அரசு துவக்கப் பள்ளியில் வேப்ப மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளதால் காற்று அதிகம் வீசும் பகுதியாக உள்ளது. பலத்த காற்று வீசினால் சாய்ந்து விழும் ஆபத்து உள்ளது. இதனை உடனடியாக அகற்றி மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு வனத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி மெத்தனம் காட்டப்பட்டு வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.