மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற மாணவர் கைது
14-Jun-2025
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த கதிர்நரசிங்கபுரம் அருகே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அரசு நடுநிலைப்பள்ளி அருகே நின்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் ராஜதானியைச் சேர்ந்த அஸ்வந்த் குமார், 19. அவரை சோதனை செய்ததில் 10 கிராம் கஞ்சா, போதைக்கு பயன்படுத்தப்படும் நித்தாபால் மாத்திரைகள் 5ஐ பறிமுதல் செய்தனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து இவற்றை விற்றுள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.
14-Jun-2025