உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொடைக்கானலில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து

கொடைக்கானலில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து

பெரியகுளம்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததுபெரியகுளத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது கொடைக்கானல் மலைப்பகுதியான வட்டக்காணல், வெள்ளகெவி பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருகிறது. கோடை வெயில் தாக்கத்தால் கும்பக்கரை அருவியில் மார்ச் 1 முதல் மார்ச் 14 வரை அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து கொண்டே இருந்தது. இந்த நிலை நீடித்தால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறையும் நிலை உருவாகியது.இந்நிலையில் நேற்று முன்தினம் மார்ச் 15ல் கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்யத் துவங்கியது. இதனால் நிலைமை தலைகீழாக மாறி கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து. நேற்று மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.கோடை வெயில் தாக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை