உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின் சிக்கன வார விழா போட்டி பரிசளிப்பு

மின் சிக்கன வார விழா போட்டி பரிசளிப்பு

தேனி: தேனி கோட்ட மின்வாரியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மின்சிக்கன் வார விழா ஆற்றல் மன்ற பரிசளிப்பு விழாவில் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருமண மண்டபத்தில் நடந்தது.மூன்று போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா தேனி மண்டபத்தில் நடந்தது. தேனி மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமை வகித்து, 261 மாணவ, மாணவிகளுக்கு கேடயம், நற்சான்றிதழ் வழங்கினார். ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைப் பொறியாளர் குமரேசன், சி.இ.ஓ., இந்திராணி முன்னிலை வகித்தனர். மின்வாரிய செயற்பொறியாளர் ரமேஸ்குமார், செயற்பொறியாளர்கள் பிரகலாதன் ,பாலபூமி பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் வெங்கட்டராமன், ஒருங்கிணைப்பாளர் உஸ்மான்அலி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை