உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் எட்டு கடைகள் அகற்றம்

மூணாறில் எட்டு கடைகள் அகற்றம்

மூணாறு : மூணாறில் காய்கறி மார்க்கெட் பகுதியில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுபடி கடைகள் அகற்றப்பட்டன.மூணாறில் காய்கறி மார்க்கெட் தனியார் தேயிலை கம்பெனி வசம் உள்ளது. மார்க்கெட் அருகே 16 சதுர அடியில் கடைகள் வைக்க நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் நடைபாதை, பொது இடம் ஆகியவற்றை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டதால் அவற்றை அகற்றக்கோரி அதே பகுதியில் கடைகள் வைத்துள்ள ஷாஜகான், அப்துல் ரகுமான், அப்துல்கரீம், மனோகரன், முத்துபாண்டி ஆகியோர் கேரள உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பெச்சுகுரியன்தாமஸ் சம்பந்தப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டார். அதன்படி எட்டு கடைகளை அதன் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு தாமாக அகற்றினர். அங்கு தனியார் தேயிலை கம்பெனி நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளுடன் நேற்று எட்டு கடைகளை தலா 16 சதுரஅடி வீதம் அளவீடு செய்து கொடுத்தது. அதே போல் அப்பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கடைகளை நிர்ணயிக்கப்பட்ட அளவில் அளவீடு செய்து முறைபடுத்துவதற்கு கம்பெனி நிர்வாகம் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ