சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
மூணாறு,: எட்டு வயது சிறுமியை சீரழித்த 55 வயதுடைய நபருக்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.1.76 லட்சம் அபராதம் ஆகியவை விதித்து இடுக்கி பைனாவ் போக்சோ அதிவிரைவு நீதி மன்றம் உத்தரவிட்டது.இடுக்கி மாவட்டம், குமுளி அருகே செங்கரை குருசுமலை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து 55. இவர், எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வழக்கு இடுக்கி பைனாவ் போக்சோ அதிவிரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லைஜூமோள்ஷெரீப், மாரிமுத்துக்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.1.76 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.