உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமிகளை ஆபாச போட்டோ எடுத்து  மிரட்டிய முதியவருக்கு ஓராண்டு சிறை

சிறுமிகளை ஆபாச போட்டோ எடுத்து  மிரட்டிய முதியவருக்கு ஓராண்டு சிறை

தேனி: சிறுமிகளை அலைபேசியால் ஆபாச போட்டோ எடுத்து மிரட்டிய முதியவர் ராஜேந்திரனுக்கு 64, ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.போடி குப்பிநாயக்கன்பட்டி ராஜேந்திரன் 64. அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். 2023ல் 15 வயது மாணவிக்கு சைகை மூலம் பாலியல் இடையூறு செய்தார். நடந்து சென்ற சிறுமியை அலைபேசியில் போட்டோ, வீடியோ எடுத்து வைத்தார். பின் அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி மிரட்டினார்.அதிர்ச்சி அடைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் ராஜேந்திரனின் அலைபேசியை வாங்கி பார்த்து அலைபேசியை போடி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தனர். போலீசார் அலைபேசியை ஆய்வுசெய்த போது, அதில் வேறு சில சிறுமிகளின் ஆபாச வீடியோக்களும், போட்டோக்கள் இருந்தது. போலீசார் போக்சோ வழக்கில் ராஜேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அரசு உதவி வழக்கறிஞர் ரஷீதா ஆஜரானார். விசாரணை முடிந்து ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ