உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில்களில் அறங்காவலர் குழு தலைவர்கள் தேர்வு

கோயில்களில் அறங்காவலர் குழு தலைவர்கள் தேர்வு

சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில், உத்தமபாளையம் ஞானம்மன் கோயில்களில் அறங்காவலர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயில் அறங்காவலர்களாக குமரேசன், விரியன்சாமி, தவமணி ராமச்சந்திரன், பால்ச்சாமி, நாகஜோதி ஆகிய 5 பேரும், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் அறங்காவலர்களாக ராஜேந்திரன், திருஞானம், முத்துக்குமார், முத்துக்கிருஷ்ணன், மாலதி ஆகியோர் ஹிந்து அறநிலைய துறை அறங்காவலர்களாக நியமித்தனர்.நேற்று காலை அறங்காவலர்கள் பதவி ஏற்றனர். தலைவர் தேர்தல் நடந்தது. சின்னமனூர் கோயிலிற்கு தலைவராக குமரேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தமபாளையம் கோயிலிற்கு வக்கீல் ராஜேந்திரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், ஹிந்து அறநிலைய துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர்கள் ஜெயராமன், நதியா ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை