உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் உலகளாவிய வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் கருத்தரங்கின் முக்கியதுவம் பற்றி பேசினார். சென்னை ஹீண்டாய் மோட்டார் நிறுவன மூத்த மேலாளர் விக்னேஷ் பரமசிவம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயலிகள் உருவாக்குதல், அதன் மூலமான வேலைவாய்ப்புகள், பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினார். கல்லுாரி ஏ.ஐ., மற்றும் தரவு துறைத்தலைவர் விக்னேஷ் கருத்தரங்கை ஒருங்கிணைத்தார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி