உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆண்டிபட்டி: கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி உள்ளது. தாலுகா அலுவலகத்தில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை 2 கி.மீ.,தூரத்தில் ரோட்டில் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை இடங்களை ஆக்கிரமித்து பலரும் கடைகள் அமைத்திருந்தனர். ஆண்டிபட்டி நகர் பகுதியில் போக்குவரத்து மற்றும் ரோட்டில் ஓரங்களில் இட நெக்கடியால் பலருக்கும் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம் போலீசார் ஒத்துழைப்புடன் ஆண்டிபட்டியில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி