உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு பயிற்சி

ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு பயிற்சி

தேனி : உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியில், அரசுப்பள்ளிகளில் 1,2ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு 'ஜாலி போனிக்ஸ்' எனும் ஆங்கில உச்சரிப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சியில் கம்பம், போடி, சின்னமனுார், உத்தமபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாநில கருத்தாளர்கள் கிருத்திகா, ராஜராஜேஷ்வரி பயிற்சி அளித்தனர். தொடக்கப்பள்ளி உதவி திட்ட அலுவலர் மோகன் பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டேவிட் முன்னிலை வகித்தார். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருணா, ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர். இப்பயிற்சி தேனி வட்டார வளமையம், நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை