தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
தேனி: தேனியில் தனியார் ஓட்டலில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள், கடன் திட்டங்கள் பற்றி முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.