உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொட்டமான் துறை திட்டத்திற்கு ரூ.123 கோடியில் மதிப்பீடு தயார்: குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு

தொட்டமான் துறை திட்டத்திற்கு ரூ.123 கோடியில் மதிப்பீடு தயார்: குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு

கம்பம்: கம்பம் - சுருளிப்பட்டி ரோட்டில் முல்லைப்பெரியாற்றில் தொட்ட மாந்துறையிலிருந்து கிழக்கு பகுதி கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ரூ.123 கோடியில் திருத்திய மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப்பெரியாறு அணை பாசனத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான சுருளியாற்றில் தொட்டமாந்துறை என்னும் இடத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று, சண்முகா நதி அணை அருகில் இருந்து வாய்க்கால் மூலம் எரசை, சின்ன ஒவுலாபுரம், கன்னிசேர்வை பட்டி, அழகாபுரி, ஒடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, ஜங்கால்பட்டி, கோவிந்த நகரம் கிராமங்களில் உள்ள 34 கண்மாய்களில் நீர் நிரப்பப்படும். 2300 கிணறுகள் மற்றும் 363 ஆழ்துளை கிணறுகள் நீர் செறிவுட்டுதலின் மூலம் 7250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்திற்கு 144 மி.கன அடி தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது. திட்டத்திற்கு 2021ல் ரூ.91 கோடி மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டது.

தேர்தலால் தடைபட்ட திட்டம்

டெண்டர் கோர இருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பால் டெண்டர் தடைபட்டது. கம்பம் எம்.எல்.ஏ.ராமகிருஷ்ணன் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தீவிர முயற்சி செய்தார்.சட்டசபையில் திட்டம் குறித்து பேசிய எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த திட்டத்திற்கு மதிப்பீடு ரூ.130 கோடியை தொடும். நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்தால் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். ஆனால் நிதியமைச்சர் அனுமதி தரவில்லை.நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் மாற்றப்பட்டு, புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார். எம்.எல்.ஏ. வின் முயற்சியால் தற்போது ரூ.123 கோடிக்கு திருத்திய மதிப்பீடு தயார் செய்து அரசின் நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித் ஜூலை 4 ல் தலைமை செயலகத்தில் நிதித் துறை துணை செயலரை நீர்வளத் துறை பொறியாளர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அரசின் நிர்வாக ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்றும், கிடைத்தவுடன் பணிகள் துவங்கும் என்றும் தேனி மஞ்சளாறு வடிநில உபகோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை