செயற்குழு கூட்டம்..
தேனி: வீரபாண்டி மஹாலில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் முனிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினராக அர்ஜூனன், மாவட்ட பொருளாளராக முனிராஜ், துணைத்தலைவராக சக்திதிருமகன், இணை செயலாளராக திருப்பதி, தணிக்கையாளராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேணடும், காணொளி ஆய்வு கூட்டங்களை முறைப்படுத்த வேண்டும், விருப்ப மாறுதல் அடிப்படையில் பணிமாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் சின்னசாமி நன்றி கூறினார்.