மேலும் செய்திகள்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
19-Oct-2024
கூடலுார்: அனைத்து நலத்திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தேனி மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தேனி மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் லட்சுமிவாசன் தலைமை வகித்தார். செயலர் துரை வேணுகோபால், பொருளாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வெங்கட் குமார் வரவேற்றார்.தீர்மானங்கள்: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்ற 7.5 சதவீத உயர்கல்வி இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். உதவி பெறும் பள்ளியிலும் ஆங்கில வழி இணை பிரிவினை அனுமதித்து பணியிட நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் பெற்று ஊதியம் இன்றி பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணிகளுக்கு நியமன ஏற்பளிப்பு அளித்து ஊதியம் வழங்கிட வேண்டும். உதவி பெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலை எளிமைப்படுத்த வேண்டும். பாரம்பரியம் மிக்க உதவி பெறும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. என்.எஸ்.கே.பி பள்ளி தாளாளர் ராம்பா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பள்ளிச் செயலாளர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
19-Oct-2024