உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து விவசாயி பலி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி துரைப்பாண்டி 52. இவரது மனைவி வாணி 41. இருவரும் மேலக்காமக்காபட்டியில் தனது எலுமிச்சை தோட்டத்தில், சில தினங்களுக்கு முன் எலுமிச்சை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது துரைப்பாண்டியை பாம்பு கடித்தது. அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ