உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி: சிறுதானியம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் ஆண்டிற்கு 13 ஆயிரம் எக்டேரில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தேனி மாவட்டம் சிறுதானிய சிறப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் மாநில சிறுதானிய இயக்க திட்டத்தில் சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2400 மானியம் வழங்கப்பட உள்ளது. சாகுபடி பரப்பை அதிகரிக்க ஏக்கருக்கு 50 சதவீதம் அல்லது ரூ.1250 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை