உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்ய அறிவுரை

செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்ய அறிவுரை

கம்பம் : பொங்கல் பரிசு தொகுப்பில் முழு செங்கரும்பு வழங்கப்படுவதால், கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்ய அறிவுருத்தப்பட்டுள்ளனர்.தைப் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு தலா ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், முழு செங்கரும்பு வழங்க உள்ளது. செங்கரும்புகளை அந்தந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. மாவட்டத்தில் சின்னமனூர், பெரியகுளம், தேனி ஆகிய ஊர்களில் மட்டுமே கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்டது.இந்தாண்டு கொள்முதல் செய்ய வேளாண் உதவி இயக்குநர்கள் கரும்பு விவசாயிகள் பட்டியலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கோரினர். அந்த பட்டியல் கலெக்டர் மூலம் கூட்டுறவு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது செங்கரும்பு கொள்முதல் செய்வதற்கான பணிகளை கூட்டுறவு துறையும், வேளாண் துறையும் இணைந்து துவக்கி உள்ளது.இது குறித்து உத்தமபாளையம் சரக பொது விநியோக திட்டம் கூட்டுறவு சார்பதிவாளர் சேகர் கூறுகையில், ஜன. 6 ம் தேதிக்கு பின் செங்கரும்பு கொள்முதல் துவங்க உள்ளது. கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வி.ஏ.ஒ. மற்றும் வேளாண் துறையிடம் சான்று பெற்று உத்தமபாளையம் வேளாண் விற்பனை சங்கம், போடி கூட்டுறவு மொத்த விற்பனைபண்டகசாகலை, தேனி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய மூன்று சங்க அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும், என்றார்.கடந்தாண்டு ஒரு கரும்பு ரூ.33 என்பதை இந்தாண்டு ரூ.35 என கொள்முதல் விலையை அரசு உயர்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை