மேலும் செய்திகள்
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
03-Oct-2025
போலீஸ் செய்திகள்.....
03-Oct-2025
நாளை( அக்.,4) மின்தடை
03-Oct-2025
ரத்ததான முகாம்
03-Oct-2025
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
02-Oct-2025
கம்பம், : கம்பம் உழவர் சந்தை நடைபாதைகளில் கடைகள் அமைத்திருப்பதால் பெண்கள் காய்கறி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.மாவட்டத்தில் கம்பம், தேனி உழவர் சந்தைகள் மட்டுமே முழு திறனில் செயல்படுகிறது . கம்பம் உழவர் சந்தையில் தினமும் 30 டன் காய்கறிகள் விற்பனையாகிறது. அதிகாலை முதல் மதியம் வரை பொதுமக்கள் கூட்டம் இருக்கும்.இந்த சந்தையில் 63 கடைகள் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 80 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. கூடுதலாக அனுமதிக்கப்பட்ட கடைகள் போதிய கடை இன்றி நடைபாதைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் குனிந்து காய்கறி வாங்க முடியாத நிலை உள்ளது.இதனால் சில -விரும்பதகாத சம்பவங்கள் தெரிந்தோ தெரியாமலோ நடைபெறுகிறது . இதனால் பெண்கள் மன உளைச்சலுடன் செல்கின்றனர். வேளாண் வணிக துணை இயக்குனர் உழவர் சந்தையை ஆய்வு செய்து, பெண்கள் எளிதாக வந்த காய்கறிகள் வாங்கி செல்ல வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
02-Oct-2025