உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அலுவலகம் முற்றுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அலுவலகம் முற்றுகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீஸ் ( சி.ஆர்.பி. எப். ) நிறுத்த வலியுறுத்தி ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கம்பத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. கம்பம் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர் கூறுகையில் அணையில் 140 கேரள போலீசார் உள்ள நிலையில் வெடி குண்டு மிரட்டல் புரளியை கிளப்புகின்றனர். எனவே அணையில் கேரள போலீசாரை அகற்றி விட்டு மத்திய ரிசர்வ் போலீசாரை நிறுத்த வேண்டும். தமிழகத்திற்கு விசுவாசமான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வினை வேறு டிவிசனுக்கு மாற்ற வேண்டும், அவரால் தான் ஆனவாச்சல் நிலம் பறிபோனது. கேரள போலீசாரை அணையில் இருந்து அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்றார். உடன் விவசாய சங்க தலைவர் மனோகரன்,நிர்வாகிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி