உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தென்னை வாரியம் சார்பில் மறுநடவு குறித்து கள ஆய்வு

தென்னை வாரியம் சார்பில் மறுநடவு குறித்து கள ஆய்வு

-தேவதானப்பட்டி, : தென்னை வளர்ச்சி வாரியத்தின் கீழ் 105 ஏக்கரில் தென்னை மறுநடவு, புனரமைத்தலை தோட்டத்தில் கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மண்டல இயக்குனர் அறவாளி விளக்கினார்.பெரியகுளம் வட்டாரம் கீழ வடகரை, மேல்மங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இணைந்து தென்னை வளர்ச்சி வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பூச்சி தாக்குதல், மின்னல் தாக்கி மகசூல் இல்லாத தென்னை மரங்கள் அகற்றி மறுநடவு, புனரமைத்தல் செய்ய நடப்பாண்டிற்கான ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 71 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது 105 ஏக்கரில் தென்னங்கன்றுகள், இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட்டு தென்னை விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட்டன.தென்னந்தோப்பில் செயல்திட்ட களஆய்வினை தென்னை வளர்ச்சி வாரியம் மண்டல இயக்குனர் அறவாளி தலைமையில், வளர்ச்சி அலுவலர் சுப்ரியா, தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர் முத்துராமலிங்கம், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் கோமதி, பாண்டியராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். தென்னை மரங்களின் உரம் மேலாண்மை, பூச்சி நோய் மேலாண்மை, நுண்ணூட்ட உரங்கள் இடுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி, தோட்டக்கலை துணை அலுவலர் சரவணன், அலுவலர்கள் ரெங்கராஜன், கிரண்ஷா, சங்கவி, ஆதில் ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை