மேலும் செய்திகள்
வனப்பகுதியில் தீ விபத்து விவசாயிகளுக்கு அறிவுரை
14-Nov-2026
போடி: வனப்பகுதியில் காட்டுத் தீ தடுப்பு, மேலாண்மை திட்டத்தின் கீழ் போடி வனத்துறை, தீயணைப்புதுறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் போடி வனத்துறை அலுவலகத்தில் நடந்தது. வனச்சரக அலுவலர் நிர்மலா தலைமை வகித்தார். தீயணைப்பு அலுவலர் ராஜலட்சுமி, வனவர்கள் நாகராஜ், பரமேஸ்வரன் முன்னிலை வகித்தனர். முகாமில் வனத்தின் முக்கியத்துவம், வனப்பகுதியில் தீ வைப்பதால் வன விலங்குகள், இயற்கை அழிவுகளால் ஏற்படும் பாதிப்பு, காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பு, தீ வைப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து வனச்சரக அலுவலர் விளக்கினார். வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்து குறித்தும், உணவு சமைக்கும் போது ஏற்படும் தீ விபத்தை தடுப்பது, விபத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். முகாமில் முந்தல், கரட்டுப்பட்டி, சோலையூர், முதுவாக்குடி, சிறைக்காடு பகுதியை சேர்ந்த வனக்குழுவினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் னர்.
14-Nov-2026