மேலும் செய்திகள்
ஒடிசா கஞ்சா வியாபாரி கைது
23-Apr-2025
தேவதானப்பட்டி : மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றவர்களின் காரை சோதனையிட்ட போது கஞ்சா கைப்பற்றிய நிலையில், காரில் பயணம் செய்த ஐவரை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏ.புதுப்பட்டி காசி 23. இவரது நண்பர்கள் ஒத்தக்கடை ஆண்ட்ரோஸ் 26, செக்காணுாரணி காசிமாயன் 25, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புகழேந்தி 24, பால் திமோதி லாசர் 23, ஆகிய ஐவர் கொடைக்கானலுக்கு காரில் சென்றனர். காரை ஆண்ட்ரோஸ் ஓட்டினார். காட்ரோடு கொடைக்கானல் ரோடு காமக்காபட்டி சோதனை சாவடியில், தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரபு ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆண்ட்ரோஸ் ஓட்டி வந்த காரினை சோதனையிட்டனர். காரின் பின்புறம் டிக்கியில் 'பேக்'கில் 125 கிராம் கஞ்சாவை அவர்கள் பயன்படுத்துவதற்கு கொடைக்கானல் கொண்டு செல்வது தெரிந்தது. தேவதானப்பட்டி போலீசார் ஐவரை கைது செய்து, கார், கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.--
23-Apr-2025