உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமிக்கு தொந்தரவு முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை

சிறுமிக்கு தொந்தரவு முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை

தேனி: தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளி ஈஸ்வரனுக்கு 58, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தேனி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அவருக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் அழைத்து சென்றார். சிறுமியிடம் அத்து மீறினார். இது பற்றி பெற்றோரிடம் சிறுமி கூறினார். சிறுமியின் பெற்றோர் புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் அமுதா அஜரானார். நேற்று விசாரணை முடிந்து குற்றவாளி ஈஸ்வரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ