உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழையால் மிதக்கும் ஏலச் செடிகள்

மழையால் மிதக்கும் ஏலச் செடிகள்

கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இடுக்கி ஏலக்காய்க்கு கிராக்கி உள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான ஏலத்தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஏலச் செடிகள், சிறு சிறு மண் சரிவுகள் ஏற்பட்டு செடிகள் சேதமடைந்துள்ளது. மேடாகவும், பள்ளமாகவும் உள்ள தோட்டங்களில், பள்ளங்களில் உள்ள செடிகள், மழை நீரில் மிதக்கின்றது. மேட்டுப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு செடிகள் பெயர்ந்து பள்ளத்தில் உள்ள தண்ணீரில் விழுந்து மிதக்கிறது. தற்போது மூன்றாவது சுற்று காய் பறிப்பு நடந்து வருகிறது. இந்த சுற்றில்தான் அதிக மகசூல் கிடைக்கும். ஆனால் தொடர் மழை காரணமாக அழுகல் நோயும் ஏற்பட்டு மகசூல் இழப்பும் ஏற்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக தோட்டங்களில் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. மண் சரிவு, மரக்கிளைகள் ஒடிந்து விழுவது ஏற்படுகிறது. இது தொடர்பாக ஏல விவசாயி அருண் பிரசாத் கூறுகையில் ஏலச் செடிகளில் அழுகல் நோய் தாக்குதல் உள்ளது. மழையால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ