உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

தேனி: பழனிசெட்டிபட்டியில் ஆஞ்சநேயா நகர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த பொதுமக்களை வருவாய்த்துறையினர் மீட்டு மண்டபங்களில் தங்க வைத்தனர். முல்லைப்பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஆஞ்சநேயா நகர் குடியிருப்பு பகுதிகளில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் திடீரென வெள்ளம் உட்புகுந்தது. அங்கிருந்த முதியோர்கள், குழந்தைகளை பேரூராட்சி பணியாளர்கள் மீட்பு வாகனங்கள் மூலம் வெளியேற்றினர். அவர்களுக்காக அப்பகுதியில் உள்ள உதவி பெறும் பள்ளியில் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளம் வடிவந்த பின் மாலை 6 :00 மணிக்கு மீண்டும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ