உள்ளூர் செய்திகள்

உணவு திருவிழா

போடி : போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் மகளிர் மையம் சார்பில் செறிவூட்டப்பட்ட உணவுத் திருவிழா கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் புருஷோத்தமன், உப தலைவர் ராமநாதன், முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். ஊட்டச்சத்து பயிற்சியாளர் கிருஷ்ண பிரியா செறிவூட்டப்பட்ட உணவுகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். முளை கட்டிய பாசிப்பயறு, தானியங்கள், ரொட்டி, வெண்ணையால் செறிவூட்டப்பட்ட உணவுகளை மாணவிகள் தயார் செய்து காட்சிப் படுத்தினர். சிறப்பாக செறிவூட்டப்பட்ட உணவினை தயார் செய்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை