உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்னாள் அமைச்சரின் சகோதரர் சுற்றுலா மையத்திற்கு எதிராக வழக்கு

முன்னாள் அமைச்சரின் சகோதரர் சுற்றுலா மையத்திற்கு எதிராக வழக்கு

மூணாறு: கலெக்டர் உத்தரவை மீறி செயல்பட்ட முன்னாள் அமைச்சரின் சகோதருக்குச் சொந்தமான சாகச சுற்றுலா மையத்திற்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இடுக்கி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பகுதிகளை மூடவும், நீர்நிலை, சாகச சுற்றுலாவுக்கு தடைவிதித்தும் மாவட்ட நிர்வாகம் மே 28ல் உத்தரவிட்டது. அந்த உத்தரவை மீறி சில சுற்றுலா செயல்பாடுகள் நடப்பதாக கலெக்டர் விக்னேஸ்வரியின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அதில் ஈடுபடுவோர், நிறுவனம் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட தடை மே 30ல் வாபஸ் பெறப்பட்டபோதும், நீர்நிலை சுற்றுலா, சாகச சுற்றுலா ஆகியவற்றிற்கு விடுக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்கின்றது.அடிமாலி அருகே இருட்டுகானம் பகுதியில் முன்னாள் மின்துறை அமைச்சரும், தற்போது உடும்பன்சோலை எம்.எல்.ஏ.வுமான எம்.எம்.மணியின் சகோதரர் லம்போதரனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான 'ஜிப் லைன்' உள்பட பல்வேறு சாகச செயல்பாடுகளைக் கொண்ட சுற்றுலா மையம் உள்ளது. அந்த மையம் கலெக்டரின் உத்தரவை மீறி செயல்பட்டதாக தெரியவந்தது. அதனை மூடவும், மையத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி மையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை