உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  9 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தயார்

 9 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தயார்

தேனி: மாவட்டத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 9036 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இந்தாண்டு அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 9036 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக 14 இடங்களில் சைக்கிள் பாகங்கள் ஒருங்கிணைப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடித்து பள்ளிகளுக்கு அனுப்ப பட உள்ளன. நாளை அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை