உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

14 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

சின்னமனூர்: தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில் திருமணமாகாத ஏழை பெண்கள், ஆண்களுக்கு இலவச திருமணம் திட்டத்தில் சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர், சிவகாமியம்மன் கோயிலில் நேற்று காலை 14 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தம்பதியினருக்கு 4 கிராம் தங்கத்தில் தாலி, உடைகள், பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து சீர்வரிசை பொருள்களும் தரப்பட்டது. திருமணங்களை எம்.எல்.ஏ, ராமகிருஷ்ணன் தலைமையேற்று நடத்தி வைத்தார். நகராட்சி தலைவர் அய்யம்மாள், கமிஷனர் கோபிநாத், அறங்காவலர்குழு தலைவர் குமரேசன், நகராட்சி துணை தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை