உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மினி பவர் ஹவுஸ் சீரமைக்கும் பணிக்கு முதல்வரிடம் கூறி நிதி ஒதுக்கப்படும் -எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் தகவல்

மினி பவர் ஹவுஸ் சீரமைக்கும் பணிக்கு முதல்வரிடம் கூறி நிதி ஒதுக்கப்படும் -எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் தகவல்

கூடலுார்: கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் தடுப்பணை உடைந்து குள்ளப்பகவுண்டன்பட்டி மினி பவர்ஹவுஸ் சேத மடைந்தது. இதனை சீரமைக்க முதல்வரிடம் கூறி நிதி ஒதுக்கப்படும் என பார்வையிட்ட எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். கூடலுார் அருகே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே குறுவனத்துப் பாலம், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய நான்கு இடங்களில் மினி பவர் ஹவுஸ் உள்ளது. அக்.17 இரவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் குள்ளப்பகவுண்டன்பட்டி மினி பவர் ஹவுஸ் தடுப்பணை உடைந்தது. இதில் வெளியேறிய வெள்ளநீர் பவர் ஹவுசிற்குள் நுழைந்து கூடுதலான சேதத்தை ஏற்படுத்தி யது. இங்கு தலா 1.25 வீதம் இரண்டு ஜெனரேட்டர்களில் 2.50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் மண் மேவி சேதம் அடைந்தது. இதனை சீரமைக்க ரூ.பல கோடி செலவாகும். ஒரு வாரத்துக்கு மேலாகியும் சீரமைக்கும் பணியை துவக்காததால் உடனே சீரமைக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் பார்வையிட்டார். அவர் கூறுகையில், 'பவர் ஹவுசில் சீரமைப்பு பணிகளை விரைவாக துவக்கி மின் உற்பத்தியை மீண்டும் துவக்க நிதி ஒதுக்குவதற்கு முதல்வர் மற்றும் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !