உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காந்தி பிறந்தநாள் பேச்சு போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

காந்தி பிறந்தநாள் பேச்சு போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

தேனி : காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அக். 17 தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பேச்சுப் போட்டி அக்., 17 ல் காலை 10:00 மணிக்கும், பகல் 2:00 மணிக்கு கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும் நடக்க உள்ளது. இதில் நடப்பாண்டில் பள்ளி,கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்களுக்கு, சத்திய சோதனை, காந்தியடிகளும் அறப்போராட்டமும், மதுரையில் காந்தியடிகள் ஆகிய தலைப்புகளில் பேச வேண்டும். கல்லுாரி மாணவர்கள், காந்தியடிகளின் தண்டியாத்திரை, அண்ணலின் வரலாற்றில் தமிழகம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடக்க உள்ளன. பள்ளி,கல்லுாரி மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களின் பரிந்துரை கடிதத்துடன் அனுமதிக்கப்படுவர். முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரம் என வழங்கப்படும். இதுதவிர அரசு பள்ளி மாணவர்கள் இருவரை தனியாக தேர்வு செய்து, சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை