உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நீர்வரத்து ஓடையில் குவியும் குப்பையால் சுகாதார பாதிப்பு

நீர்வரத்து ஓடையில் குவியும் குப்பையால் சுகாதார பாதிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், சக்கம்மாபட்டி மழைநீர் வரத்து ஓடையில் குவியும் குப்பையால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் இப்பகுதி ஓடை வழியாக சுந்தரராஜபுரம், சக்கம்மாபட்டி, கதிர்நரசிங்கபுரம், கொத்தப்பட்டி வழியாக அதிகாரி கண்மாயில் சேர்கிறது. சக்கம்மாபட்டி கிராமத்தில் சேரும் குப்பையை நீர்வரத்து ஓடையில் குவிக்கின்றனர். ராஜதானி ஊராட்சி நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளவில்லை. குப்பை அப்புறப்படுத்தப்படுவதும் இல்லை. பலவகை அசுத்தங்கள் கலந்த குப்பை மழை நீருடன் சேர்ந்து அடுத்தடுத்த கிராமங்கள் வழியாகச்செல்லும்போது நோய் தொற்றுக்கு வழி ஏற்படுத்தும். ஓடையில் குப்பை கொட்டுவதை தடுக்க ராஜதானி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை