உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்வலி கிழங்கு சாப்பிட்ட சிறுமி பலி

கண்வலி கிழங்கு சாப்பிட்ட சிறுமி பலி

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் 40, தற்போது வண்ணாத்திப்பாறை பகுதியில் குடியிருந்து குடும்பத்துடன் தேன் எடுக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவரது மகள் கண்ணியம்மாள் 13, சம்பளத்திற்காக ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். நவம்பர் 27ல் ஆடுகள் மேய்த்து விட்டு மாலையில் வீட்டிற்கு வந்த சிறுமி வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு ஆடு மேய்க்கும் போது காட்டில் கிடைத்த கண்வலிக்கிழங்கை சாப்பிட்டதாகவும் அது வயிற்றுக்கு சேராமல் வாந்தி எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்த சிறுமியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இரவில் இறந்தார். இதுகுறித்து சந்திரன் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை