மேலும் செய்திகள்
சிறுமி பலாத்காரம்; தொழிலாளி கைது
19-Sep-2024
தேனி: தேனியில் 17 வயது சிறுமி ஜவுளிக்கடையில் பணிபுரிந்தார். அப்போது, சிறுமியை, அவரது உறவினர் அருண்குமார், 22, காதலித்ததாகக் கூறினார். சிறுமியும், அருண்குமாரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். சிறுமியுடனான முறையற்ற திருமணத்தை, அருண்குமார் தந்தை பரமன், 55, தாய் பேச்சியம்மாள், 40, ஏற்றுக் கொண்டனர்.சிறுமியும், கணவரும் தேனி அருகே உள்ள சிறுமியின் வீட்டிற்கு வந்தனர். சிறுமியின் தாய் இருவரையும் திட்டினாலும் பின் அவரும் அவர்களை ஏற்றுக்கொண்டார். பிறகு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக சிறுமியை தேனி அரசு மருத்துவமனைக்கு தாய் அழைத்துச் சென்றார். பரிசோதனையில் சிறுமி, மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மகளிர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து சிறுமியின் தாய், அருண்குமார், பேச்சியம்மாள், பரமன் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
19-Sep-2024