பள்ளியில் தாத்தா பாட்டி தினம்
தேனி: வடபுதுப்பட்டியில் உள்ள லைப் இன்னோவேஷன் பள்ளியில் தாத்தா பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் நாராயணபிரபு தலைமை வகித்தார். குலேசகர ராமானுஜ ஜீயர் மடம் ராமபிரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள் பங்கேற்றார். மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்ற தாத்தா பாட்டிகளுக்கு பாத பூஜை செய்து மரியாதை செலுத்தினர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், கல்வி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.