உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சி அலுவலக புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை

ஊராட்சி அலுவலக புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் திம்மரசநாயக்கனூர் ஊராட்சி அலுவலக புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை நடந்தது. இந்த அலுவலகத்திற்கான கட்டடம் சேதமடைந்து சமீபத்தில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அதே இடத்தில் புதிய அலுவலக கட்டடம் கட்ட ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன், ஊராட்சி முன்னாள் தலைவர் அக்ஷயா, திம்மரசநாயக்கனூர் பெருமாள் கோயில் அறங்காவலர் ராம்குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை