மேலும் செய்திகள்
கனமழையால் 800 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
19-Oct-2025
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சையது அப்தாகிர் மகன் முகமது மீரான் 26, கடந்த செப். 25 இரவு உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டார். போதையில் இருந்தவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தினர். இக் கொலை தொடர்பாக அவரது நண்பர்கள் உத்தமபாளையம் பாறைமேட்டு தெரு இளஞ்செழியன் 21, விஜய் 22, சிவா 24 ஆகியோரை கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர். கொலையாளிகள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தேனி எஸ்.பி. ஸ்நேக ப்ரியா பரிந்துரையை ஏற்று கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தர விட்டார். உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் அதற்கான உத்தரவுடன் மூவரையும் தேனி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
19-Oct-2025