உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சின்னமனூரில் சுகாதார பணியில் சுணக்கம்

சின்னமனூரில் சுகாதார பணியில் சுணக்கம்

சின்னமனூர்: சின்னமனூரில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி,குப்பை அகற்றும் பணியில் சுணக்கம் நிலவுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சின்னமனூரில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எழில்நகர், அண்ணாமலை நகர், மின் நகர், சிவசக்தி நகர், கண்ணம்மா கார்டன், லட்சுமி நகர் என விரிவாக்க பகுதிகள் உள்ளன. நகராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், குப்பை அகற்றும் பணி தனியார்மயமாக்கி உள்ளனர். நிரந்தர பணியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால் நகர் முழுவதும் சாக்கடை சுத்தம் செய்யாத நிலை உள்ளது. இதனால் வீதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் குப்பைகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. தனியார் மயமாக்கப்பட்டதால் அவர்கள் குப்பை முறையாக அகற்றுவதில்லை என மக்கள் புகார்கூறுகின்றனர். நகரின் சுகாதாரம் பற்றி துப்புரவு பிரிவு அலுவலர்களும், கமிஷனரும் கண்டு கொள்ளமால் உள்ளனர். நகரின் சுகாதாரம் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ