வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதிகாரிகளை சுனாமி தாக்கும் கரையருகே பணிக்கு அனுப்பவும்.
பெரியகுளம்: பெரியகுளம் கும்பக்கரைப் பிரிவு அருகே தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு ஊர்களின் கி.மீ., காட்டும் வழிகாட்டி போர்டு ஓராண்டாக தோட்டத்தில் கிடக்கிறது. பழைய இரும்பு கடைக்கு எடைக்கு போவதற்குள் நெடுஞ்சாலை துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே பெரியகுளம்- கும்பக்கரைப் பிரிவு ரோடு துவங்குகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் ரோடு அகலப்படுத்தும் பணியின் போது ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஹைடெக் கி.மீ., வழிகாட்டி போர்டு எதிரேயுள்ள தோட்டத்தில் கழற்றி வைக்கப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் மீண்டும் ஹைடெக் போர்டு வைக்காமல் தோட்டத்தில் கிடக்கிறது. இந்த போர்டில் கும்பக்கரை அருவி 7 கி.மீ., அடுக்கம் 25 கி.மீ., கொடைக்கானல் 50 கி.மீ., என எழுதப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான வாகன டிரைவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டி போர்டாக இருந்தது. தற்போது மாடு, ஆடு கட்டி வீணாகிறது. பழைய இரும்பு கடைக்கு எடைக்கு யாராவது எடுத்து செல்வதற்குள் நெடுஞ்சாலை துறை நிர்வாகம், அந்த போர்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.--
அதிகாரிகளை சுனாமி தாக்கும் கரையருகே பணிக்கு அனுப்பவும்.