உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஹிந்து முன்னணி மனு

ஹிந்து முன்னணி மனு

தேனி: பழனிசெட்டிபட்டி ஹிந்து முன்னணி துணைத் தலைவர் திலகராஜ். இவர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பகுதியில் வெள்ளாஞ்செட்டியார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட வீருசின்னம்மாள், பரிவார தெய்வங்கள் அடங்கிய கோயில் உள்ளது. அக்கோயில் உரிமைதாரர்கள் ஆண்டிற்கு 2 முறை அப்பகுதியில் கோயிலில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் போடேந்திரபுரத்தை சேர்ந்த ஒருவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி, அங்கு உடல் அடக்கம் செய்யும் பகுதியை அனுமதியின்றி கட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை