மேலும் செய்திகள்
விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
29-Jan-2025
கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு
04-Feb-2025
தேனி; பணிநிரந்தம், ஊதிய உயர்வை வலியுறுத்தி இன்று(பிப்.,6) முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கவுரவ விரைவுரையாளர்கள் தெரிவித்தனர்.மாவட்டத்தில் ஆண்டிபட்டி, வீரபாண்டி, கோட்டூர் ஆகிய ஊர்களில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இங்கு 35க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, பணிநிரந்தம் வழங்க கோரி ஒரு வாரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜூ கூறுகையில், 'கவுரவ விரைவுரையாளர்களுக்கு ஆண்டிற்கு 11 மாதம் ஊதியம் வழங்கப்படுகிறது, அதுவும் குறைந்த அளவு வழங்கப்படுகிறது. யு.ஜி.சி., நிர்ணயித்த ஊதியம் ரூ.50ஆயிரம் வழங்க வேண்டும். பணிநிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்', என்றார்.
29-Jan-2025
04-Feb-2025