உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விடுதி மாணவர் பலாத்காரம்; காப்பாளருக்கு 25 ஆண்டு சிறை

விடுதி மாணவர் பலாத்காரம்; காப்பாளருக்கு 25 ஆண்டு சிறை

தேனி; தேனி மாவட்டம், கம்பம் அருகே சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பள்ளி விடுதி உதவி காப்பாளர் முகிலனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராயப்பன்பட்டி தனியார் பள்ளி மாணவர் விடுதி உதவி காப்பாளர் முகிலன் 28. இவர் விடுதியில் படித்த 13 வயது சிறுவனை 2023 மார்ச் 23ல் பலாத்காரம் செய்து, வெளியில் சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்தார். மறுநாளும் சிறுவனை பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்தார். ராயப்பன்பட்டி போலீசார் முகிலனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து முகிலனுக்கு 25 ஆண்டுகள் சிறை, ரூ.15 அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனின் புனர்வாழ்விற்காக அரசு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை